இந்த பிரபஞ்சத்தின் முதல் செய்தியாளராக, செய்தியாளர்களுக்கே உரிய அனைத்துத் தன்மைகளுடன் திகழ்ந்தவர் நாரதர். அவரின் பெயரால் வருடம்தோறும் விஸ்வ சம்வாத கேந்திரம் அமைப்பு நாரதர் விருதுகளை சிறந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வகையில், விஸ்வ சம்வாத கேந்திரம் தென் தமிழக அமைப்பின் சார்பாக, ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மற்றும் ‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ நூலின் ஆடியோ புத்தக வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 21 அன்று கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் ஹோட்டலின் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தலைமை விருந்தினராக தினமலர் தலைமை ஆசிரியர் கே. விஜயகுமார், சிறப்பு விருந்தினராக தினமலர் எடிட்டோரியல் எடிட்டர் எக்ஸ். செல்வகுமார் கலந்துகொள்கின்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத பிரச்சார பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீராம் சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், ஸ்வராஜ்யா இதழின் ராதா, ஹிந்து பத்திரிகையின் சி.இ.ஓ ராஜ்குமார், எழுத்தாளர் ஜோதி கணேசன் ஆகியோருக்கு ஸ்ரீ நாரதர் விருதுகள் வழங்கப்படுகின்றன.