சில நாட்களுக்கு முன்னால் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த செவிலியர் சௌமியா சந்தோஷின் மரணம் குறித்த செய்தியை என்.டி.டி.வி வெளியிட்டபோது, ‘இஸ்ரேல் காரணமாக இறந்த சௌமியாவைன் உடல் டெல்லி வந்தது’ என்று செய்தியை வெளியிட்டது. ஆனால், இந்த கோர தாக்குதலை நடத்திய முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் குறித்தோ அல்லது அந்த பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் பாலஸ்தீன அரசு குறித்தோ எதையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, இது குறித்த கள நிலவர செய்திகளை வெளியிட இஸ்ரேலுக்கு செல்ல என்.டி.டிவியின் பர்காதத் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனல், என்.டி.டி.வியின் நிர்வாகம், அதன் ஒரு சார்புத்தன்மை, பர்காதத்தின் பிண்ணனி குறித்து முன்னதாகவே நன்கு அறிந்திருந்த இஸ்ரேல், அவரது விசா கோரிக்கைக்கு அனுமதி மறுத்துள்ளது.