காசி கோயிலில் நுழைந்த மர்ம நபர்கள்

ஞானவாபியில் உள்ள காசி விஸ்வநாதர் சிவலிங்கம் வழக்கில் நீதிமன்றம் அளித்த முக்கியமான தீர்ப்புக்கு முன்னதாக சந்தேகிக்கத்தக்க மூன்று நபர்கள் வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கழுத்தில் பச்சைத் துண்டு அணிந்த முஸ்லிம்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேரும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, ​​அவர்கள் சந்தேகப்படும்படியாக இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவர்கள் மீதான சந்தேகம் வலுத்ததையடுத்து மேலதிக விசாரணைக்காக அவர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள், வாரணாசியில் பலமணி நேரம் சுற்றித் திரிந்தனர் என்றும் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் பகுதியை சேர்ந்த அவர்கள் தாங்கள் டெல்லிக்கு செல்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.