மைசூர் பருப்பு இறக்குமதி வரி ரத்து

மசூர்தால் என அழைக்கப்படும் மைசூர் பருப்பு மீதான இறக்குமரி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அமெரிக்காவைத் தவிர பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபப்டும் மைசூர் பருப்புக்கு இந்த இறக்குமதி வரி ரத்து பொருந்தும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 30 சதவிகிதமாக இருந்த வரி தற்போது 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.