மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சுடி கிராமத்தில் பஹுதாலி அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இதன் தலைமை ஆசிரியர் தின்பந்து மித்ரா, மாணவ மாணவிகளின் புகைப்படங்களைப் மாவட்ட நிர்வாகத்திற்கு சீருடையில் அனுப்ப வேண்டியிருப்பதால், பர்தாவுக்குப் பதிலாக பள்ளிச் சீருடையை அணிந்து வருமாறு தெரிவித்துள்ளார். இதன் அவசியம், அரசு உத்தரவு என எதையும் புரிந்துகொள்ளாத உள்ளூர் முஸ்லிம் வன்முறை கும்பல், பள்ளியையும், பள்ளி ஊழியர்கள் 18 பேரையும் கற்களை வீசித் தாக்கியது. தலைமை ஆசிரியரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பள்ளியை முற்றுகையிட்டது. காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தினர். அன்று மாலையில் பள்ளி கட்டிடத்திற்குள் அடைப்பட்டிருந்த தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களை காவலர்கள் மீட்டனர். இந்த வன்முறை கும்பலை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். கல்வித்துறையின் உத்தரவுப்படி செயல்பட்ட தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து தனது சிறுபான்மையினர் விஸ்வாசத்தை அம்மாநில அரசு வெளிப்படுத்தியுள்ளது.