தாய்மதம் தழுவும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்

மத தாராளமயமும் சுதந்திரமும் இளம் முஸ்லிம் பெண்களை சனாதன தர்மத்தின்பால் ஈர்த்துள்ளது. உயர் கல்வி கற்ற பல இளம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி ஹிந்துத்துவாவுக்கு மாறி ஹிந்து இளைஞர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். 100 கிறிஸ்தவர்கள் சனாதனத்திற்குத் திரும்பினர் என்று சந்திர தேப் கோஸ்வாமி கூறியுள்ளார். அசாம் மாநிலம் நாகோனில்  மே 18 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜகலபந்த சத்ரா யுகல் சத்ராதிகர் சந்திர தேப் கோஸ்வாமி இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். மேலும், “சத்ராதிகர் எனது மேற்பார்வையில் 15 படித்த முஸ்லீம் பெண்கள் ஹிந்து ஆண்களை மணந்து சனாதன மதத்தைத் தழுவினர். தற்போதைய நிலவரப்படி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட மேலும் சில படித்த முஸ்லிம் பெண்கள், ஹிந்துத்துவாவுக்கு மாறி ஹிந்து ஆணை திருமணம் செய்ய என்னுடன் தொடர்பு கொண்டுள்ளனர். சமூக காரணங்களுக்காக அவர்களின் புதிய அடையாளங்களை நான் வெளியிட விரும்பவில்லை” என்றார்.

“ஹிந்துத்துவாவில் உள்ள ஏழு வகையான பாதுகாப்பு முஸ்லிம் சமூகத்தின் உயர் படித்த இளம் பெண்களை ஹிந்து மதத்திற்கு ஈர்த்துள்ளது. இஸ்லாத்தில், பெண்களுக்கு வாரிசு உரிமைச் சட்டத்தில் மதிப்பு இல்லை. தன் விவாகரத்து நடைமுறை என்பது மெதுவாக முஸ்லிம் பெண்களை தெரு பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. முஸ்லிம் சமூகத்தில் பலதார மணம் கடைப்பிடிக்கப்படுவதால் அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்குவதற்கான அழுத்தம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை அழிக்கிறது. பல இளம் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை சகித்துக்கொள்வதில்லை. மேலும், அவர்களுக்கு மத சுதந்திரமும் கிடைக்கவில்லை, இது போன்றவையே ஹிந்துத்துவாவின் தன்மையின் பக்கம் அவர்கள் ஈர்க்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

மறுபுறம், மோரிகான் மாவட்டத்தில் 16 கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் ஹிந்துத்துவாவுக்கு திரும்பியுள்ளனர். கிறித்துவத்தால் ஏமாற்றப்பட்ட அந்த மக்கள் இப்போது மே 18 அன்று ஜாகிரோட்டில் நடந்த ஒரு விழாவில் தங்கள் தாய்மத நம்பிக்கைக்குத் திரும்பியுள்ளனர். இந்த மக்கள் மோரிகான் கர்பி ஆங்லாங் எல்லையில் உள்ள தொலைதூர மலைப் பகுதிகளில் வசித்து வந்தனர். மிஷனரிகளால் நல்ல சுகாதார வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட போலி வாக்குறுதிகள் மூலம் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும், இந்த பழங்குடியினர் கிறிஸ்தவ மதத் தலைவர்களால் தூக்கி எறியப்பட்டனர்” என தெரிவித்தார்.

ஹிந்துத்துவாவுக்குத் திரும்பியவர்களில் ஒருவரான அமல் ஆம்ரே, “எங்களது மதமாற்றத்தின் போது அவர்கள் எங்களுக்கு ஒரு கட்டு அலுமினியத் தாள்களும் சில குளிர் தாங்கும் ஆடைகளையும் வழங்கினர். ஆனால், அதன் பிறகு, எங்களது கிராமத்தில் மிஷனரிகள் யாருமே தென்படவில்லை. அவர்கள் கிறிஸ்மஸ் நேரத்தில் இங்கு வந்து, அதிகமான மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு கொண்டு வருமாறு கிராம மக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பல வருட துன்பங்களுக்குப் பிறகு, 16 குடும்பங்கள் இறுதியாக தங்கள் சொந்த மத நம்பிக்கைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளன என கூறினார்.