பெண்களை தாக்கிய முஸ்லிம் இளைஞர்கள்

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் சென்ற 3 ஹிந்துப் பெண்களைத் தாக்கியதற்காக அடையாளம் தெரியாத 20 முஸ்லிம்கள் மீது பீகார் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்ட அந்த முஸ்லிம் இளைஞர்களில் மூன்று பேர் கோல்டன் அகமது, சுப்ரதி அகமது மற்றும் சதிடன் காதுன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நியூஸ்18 செய்தியின்படி, கோபால்கஞ்ச் பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலில் இந்த சம்பவம் நடந்தது. கோயிலில் ஒலிபெருக்கியில் பஜனை பாடல்கள் வாசித்ததற்காக மூன்று பெண்களையும் அவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பெண்களும் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். “கடவுளை வணங்கியதற்காகவும், ஒலிபெருக்கியில் பஜனை வாசித்ததற்காகவும் எங்களை அடித்தார்கள். இந்த கோயிலில் இறைவனை வழிபட வருபவர்களை அவர்கள் (முஸ்ளிம்கள்) அவ்வப்போது தாக்குகின்றனர்” என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குலாபி தேவி உறுதிப்படுத்தினார். நவராத்திரி மற்றும் துர்கா பூஜையையொட்டி கோயிலில் பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.