இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங்க் பகுதியில், உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் வைக்கப்பட்டிருந்த ஹிந்து மத பிரசாதங்கள் அங்குள்ள ஒரு முஸ்லிம் இளைஞன் காலால் உதைத்துத் தள்ளினான். அதே நேரத்தில் முஸ்லிம் மத முழக்கமான “அல்லா-உ-அக்பர்” என்று கூக்குரலிட்டான். இந்த வீடியோ தற்போது வெளியானது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவமதிப்புக்கு காரணமானவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. இந்தோனேசியாவின் முக்கிய மதம் இஸ்லாம் என்றாலும் அங்கு நான்காவது பெரிய மதமாக ஹிந்து மதம் உள்ளது. மேலும் இந்த சம்பவம் நடைபெற்றது ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதி. கடந்த அக்டோபரில், இந்தோனேசியாவின் ஸ்தாபக ஜனாதிபதி சுகர்னோவின் மகள் சுக்மாவதி சுகர்ணோபுத்ரி, பாலியில் நடந்த ஒரு பிரமாண்ட விழாவில் தனது முஸ்லிம் மத்த்தை விட்டு விலகி தனது மூதாதையர் மதமான ஹிந்து தர்மத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.