பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை ஆதரித்து தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டதற்காக, மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிரதிக் பவார் என்ற ஹிந்து இளைஞர் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முஸ்லிம் மதவெறியர்களால் கொடூரமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார். பிரதிக், அமித் மானே என்ற நண்பருடன் ஒரு நிகழ்வுக்குச் சென்று கொண்டிருந்தார், அவர்கள் கர்ஜத் நகரின் அக்காபாய் சௌக் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையின் முன் மற்றொரு நண்பருக்காகக் காத்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வாள்கள் மற்றும் தடிகளை கொண்டுவந்த 15 பேர் கொண்ட ஒரு முஸ்லிம் அடிப்படைவாத கூட்டத்தினர், பிரதிக்கை கொடூரமாகத் தாக்கினர். அப்போது அந்த அடிப்படைவாதிகள், “உங்கள் ஹிந்துத்துவத்தைப் பற்றி நீ மிகவும் பெருமைப்படுகிறாய். உமேஷ் கோல்ஹேவின் கதிதான் உனக்கும் வரும். நுபுர் ஷர்மாவை ஆதரிக்கும் பல உள்ளடக்கங்களை நீ சமூக ஊடகத்தில் வெளியிடுகிறாய். அதனால், பலர் உன்னுடன் இணைந்துள்ளனர்.” என மிரட்டிச் சென்றுள்ளனர். அமித் மனேவும் மற்றவர்களும் பிரதிக் பவார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். பிரதீக் உயிர் பிழைத்தாலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது மருத்துவமனையில் ஐ.சி.யுவில் உள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரதீக்கை தாக்கிய ஷாருக் கான் பதான், நிஹால் கான் பதான், சோஹைல் ஷௌகத் பதான், அர்பாஸ் கசம் பதான் மற்றும் ஜுனைத் ஜாவேத் பதான் ஆகியோர் முக்கிய தாக்குதல் நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மைனர் ஒருவரும் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.