சில முஸ்லிம் இணையவாசிகள் ஒரு முஸ்லிம் நபர் மக்களால் தாக்கப்பட்டு பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஒரு வீடியோவை பகிர்ந்துகொண்டு, பாரதத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இல்லை, ரம்ஜானின் போது முஸ்லிம் நபர் கொடூரமாக தாக்கப்பட்டார் என்று தங்கள் பழைய பிரிவினைவாத பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கினர். சமூக ஊடகப் பயனர்கள் பலர், அவரை தாக்கிய மக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதன் உண்மைத் தன்மையை ஆராயாத முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலர், தாக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக பேரணி ஒன்றை கூட நடத்தி விட்டனர். பாரதத்தில் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று உண்மைகளை திரிப்பது என்பது இடதுசாரி அறிவுஜீவிகள், தாராளவதிகள் மற்றும் சில முஸ்ளிம் அமைப்பினரின் மிகப்பழமையான செயல்பாடாகும். அவர்கள் இன்றுவரை அதில் இருந்து வெளியே வரவேயில்லை. உண்மை என்னவெனில், செலுவிலிருந்து பத்ரி நோக்கிச் சென்ற MH 20 BL 3505 என்ற எண் கொண்ட பேருந்தில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளிச் சிறுமிகள் பயணித்துக்கொண்டு இருந்தனர். அப்போது 34 வயதான இம்ரான் ஃபரோக்கி என்ற நபர், அந்த சிறுமிகளில் ஒருவரைத் பாலியல் ரீதியாக் துன்புறுத்தத் தொடங்கினார். சம்பவத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுனரன ராவுத் மற்றும் நடத்துனர் விஷ்ணு கும்பகர்ணன் ஆகியோர், பேருந்து ஒருங்குமுறை ஆய்வாளர் வசந்தைதொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு பேருந்தை மீண்டும் டிப்போவுக்கு கொண்டு சென்றனர். இத்தகைய கீழ் நடத்தை கொண்ட இம்ரான் ஃபரோக்கி மீது அதுவரை கடும் கோபத்தில் இருந்த சக பயணிகள், பேருந்து டிப்போவை அடைந்தவுடன், அவரை அடித்து பேருந்தை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த மர்ம நபரை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமி எந்த புகாரும் அளிக்கவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இம்ரான் ஃபரோக்கி மீது தாக்குதல் நடத்திய 19 பேர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.