முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம்

கேரளாவில் உள்ள முஸ்லிம் மதகுரு அலியார் காசிமி, “கேரளா ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாகும், மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் முஸ்லிம்கள் உள்ளனர்.மேலும் ஹிந்து ஈழவர் மக்கள் தொகை 22 சதவீதமாகவும் ஹிந்து நாயர் மக்கள் தொகை 12 சதவீதமாகவும்.கிறிஸ்தவ மக்கள் தொகை 19 சதவீதமாகவும் உள்ளது” என கூறியுள்ளார்.அலியார் காசிமி சமூக ஊடகங்களில் தீவிர செயலிபாட்டில் உள்ளவர்.அவருக்கும் பிரபல யூடியூபரான டாக்டர் முகமதுக்கும் இடையேயான யூடியூப் விவாதத்தின் சர்ச்சைக்குரிய இந்த பகுதி சமூக ஊடகங்களில் வைரலானது.2011ம் ஆண்டு சாஸ்த்ர சாகித்ய பரிஷத் நடத்திய கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை இதற்கு காசிமி மேற்கோள் காட்டியுள்ளார்.ஆனால், அதே சமயம், தேசிய அளவில் நிலைமை வேறுபட்டது என்றும் அவர் கூறுகிறார்.அவர் மேற்கோள் காட்டிய சாஸ்த்ர சாகித்ய பரிஷத் அமைப்பு, சி.பி.எம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு அமைப்பாக கேரள மக்களால் அறியப்படுகிறது.அலியார் காசிமியின் இந்த கருத்து வைரலாக மாறியதையடுத்து, இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருந்தால், முஸ்லிம் சமூகம் ஏன் சிறுபான்மை அந்தஸ்தைப் பெறுகிறது, ஏன் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளைக் கொண்டுள்ளது, ஏன் அவர்கள் ஓ.பி.சி இடஒதுக்கீடு மற்றும் முஸ்லிம் பெண்கள் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகளிய பெறுகின்றனர்? சிறுபான்மை அந்தஸ்தின் கூடுதல் நன்மையைப் பெறுவதுடன், ​​அவர்கள் இரட்டை இடஒதுக்கீட்டின” கூடுதல் நன்மையையும் பெறுகிறார்கள்.ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்குப் பதிலாக, ஒரே மதமாக இடஒதுக்கீடு பலன்களைப் பெறுகிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு.இடஒதுக்கீடு, பொது சிவில் சட்டம் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் போதெல்லாம் தாங்கள் சிறுபான்மை சமூகம் என்று முஸ்லிம் அறிவுஜீவிகள் ஏன் கூறுகின்றனர்?என்று சுதந்திர சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.