மக்களைத் தூண்டும் முஸ்லிம் அடிப்படைவாதிகள்

யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதை தடுக்கும் முயற்சியில், முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பினர் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த யூனியன் பிரதேச நிர்வாகியான பிரபுல் படேல் மற்றும் மத்திய அரசிற்கு எதிராக பிரச்சாரங்களை அவர்கள் லட்சத்தீவில் செய்து வருகின்றனர். அங்குள்ள மொத்த மக்கள்தொகையில் 96% முஸ்லிம்கள் என்பதால் லட்சத்தீவின் ‘இஸ்லாமிய தன்மையை’ படேல் குறைத்து மதிப்பிடுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த பயங்கரவாத ஆதரவு அமைப்புகளால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டங்களை எதிர்த்து தீவுகள் முழுவதும்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, லட்சத்தீவுக்கு அருகே வெளிநாட்டு கப்பல்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவது, 2019ல் இலங்கையில் இருந்து லட்சத்தீவு தீவுகளுக்கு 15 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் சென்றது, சமீபத்தில் மினிகோய் தீவில் இருந்து கடலோர காவல்படையினரால் ரூ. 3,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, இலங்கை, ரவிஹான்சியில் இருந்து வந்த மீன்பிடி படகு ஒன்றில் இருந்து 300 கிலோ ஹெராயின் மற்றும் 1,000 துப்பாக்கி குண்டுகளுடன் 5 ஏ.கே 47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டது குறித்து புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில், கடந்த 2020 டிசம்பரில், லட்சத்தீவின் நிர்வாகியாக பிரபுல் படேல் பொறுப்பேற்ற பின்னர், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அங்கு 18 சோதனைகளை நடத்தியுள்ளார். லட்சத்தீவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் தீவின் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்தவும், தேச பாதுகாப்பில் அதன் முக்கியத்துவம் காரணமாக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார். ஆனால், கேரள கம்யூனிச, காங்கிரஸ் கட்சியினர் லட்சத்தீவின் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக இருக்கினர். பிரபுல் படேலை அந்த பொறுப்பில் இருந்து நீக்குமாறு சி.பி.ஐ.எம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி எலமனம் கரீம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.பி. பலராமும் அவர்களின் சட்டவிரோத போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.