மகாராஷ்டிராவின் அகமது நகரில் ஷேவ்கான் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சத்ரபதி சம்பாஜி மகாராஜ் ஜெயந்தியையொட்டி ஹிந்துக்கள் ஏற்பாடு செய்திருந்த அமைதியான ஊர்வலத்தின் மீது மத அடிப்படைவாத முஸ்லிம்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். முஸ்லிம்களின் ஹிந்து வெறுப்பை வெளிப்படுத்தும் மற்றொரு சம்பவம் இது. இது தொடர்பாக, ஷெவ்கான் நகர காவல்துறையினர் 32 நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள், வாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். இந்த தீவிர மத அடிப்படைவாதிகள், இரவு சுமார் 8 மணியளவில் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சவுக்கை ஊர்வலம் அடைந்தபோது, அமைதியாக நடைபெற்ற அந்த ஊர்வலத்தின் மீது கற்களை வீசினர், சில வாகனங்களை எரித்தனர். சில கடைகள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு காவல் அதிகாரிகள், இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர்வாசி ஒருவர் என மொத்தம் 5 பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் வேகமாக செயல்பட்டு இதில் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அந்த மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படை, கலகக் கட்டுப்பாட்டுப் படை மற்றும் 250 காவல் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அடையாளம் தெரிந்த 102 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன் அடையாளம் தெரியாத 50 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இரு இடங்களிலும் (அகோலா மற்றும் அஹமத்நகர்) அமைதி நிலவுகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு இந்த பதற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். அவர்களை விடமாட்டோம். அரசியல் உந்துதல் மற்றும் சில அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம்” என தெரிவித்தார்.