இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814 1999ல் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. பணயக் கைதிகளாக இருந்த அந்த விமானப் பயணிகளை காப்பாற்ற சில பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் முஷ்டாக் அகமது சர்கார்ரும் ஒருவர். இவர் தற்போதும் கொலை, கடத்தல், தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அந்த பயங்கரவாதி பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், தீவிர பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் உள்ளார். அவரால் அமைதிக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதால் அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், 1967ன் கீழ் பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், சர்காரின் பயங்கரவாத அமைப்பான அல் உமர் முஜாஹிதீன் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.