அசாம் மாநிலத்தில் இருந்து ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சந்தோஷ் மோகன் தேவின் மகள் சுஷ்மிதா தேவ். இவரும் தற்போது, காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை. சுஷ்மிதா தேவ் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி விட்டார். கட்சியுடன் தனது முப்பதாண்டு கால பயணத்தை நினைவுகூர்ந்து, கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் அகில இந்திய மகிளா காங்கிரசின் முன்னாள் உறுப்பினர் எனவும் மாற்றிவிட்டார்.