ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசித்த அம்மாநில பூர்வகுடிகளான காஷ்மீர பண்டிட்டுகள் 1990ல் அம்மாநில அரசின் ஆதரவுடன் முஸ்லிம்கள் செய்த வன்முறை, கற்பழிப்பு, கொலைகள் காரணமாக தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறினர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வந்தனர். பலர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு எடுத்துவரும் மீள்குடியேற்றத் திட்டங்கள், சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம் போன்றவற்றால் தற்போது 3,841 பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 1,997 பேர் மீள்குடியமர்வு செய்யப்பட உள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் 2021 ஜனவரியில் மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 2,000 அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்காக 2,600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்ட 5 மாவட்டங்களில் நிலங்களை அளிக்க ஜம்மு -காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2022ம் ஆண்டிற்குள் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து காஷ்மீர் பண்டிட்டுகளையும் மீள்குடியமர்த்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.