முஸ்லிம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வரும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கும் சேர்ந்துள்ளது. சமீபத்தில் டென்மார்க் நாடாளுமன்றம் இதற்காக ஒரு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, தங்கள் நாட்டில் உள்ள மசூதிகளுக்கு வெளிநாடுகள் நிதியுதவி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா, குவைத், லிபியா, மொராக்கோ, சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் போன்ற முஸ்லீம் நாடுகள் ஐரோப்பாவில் இஸ்லாத்தை பரப்புவதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை வழங்கி வருவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கு டென்மார்க்கின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. டென்மார்க் மக்கள் தொகையில் 1980 ல் வெறும் 0.6 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள் தற்போது அங்கே 2,50,000 என்ற எண்ணிக்கையில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இவர்களால் அங்கு பயங்கரவாதங்களும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளது. தைபா மசூதி இதற்கு அடிப்படையாக விளங்குகிறது என டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது.