மங்கோலிய அரசின் கோரிக்கையை ஏற்று, பாரதத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள், புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மங்கோலியாவின் காந்தன் மடாலயத்தின் வளாகத்தில் உள்ள பாட்சகன் கோயிலில் 12 நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மங்கோலியா அதிபர், மங்கோலியாவின் அரசு பிரதிநிதிகள் உட்பட பலரும் இதனை தரிசித்தனர். மடங்களைச் சேர்ந்த உயர்மட்ட மடாதிபதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர். மங்கோலிய மக்களின் கோரிக்கையின் பேரில் புனித நினைவுச்சின்னங்கள் காட்சிப்படுத்தப்படும் கால அவகாசம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த புனிதச் சின்னங்கள் ராணுவ விமானத்தில் பாதுகாப்பாக பாரதம் திரும்பி கொண்டுவரப்பட்டது. மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் காஜியாபாத்தில் இவற்றை வணங்கி பெற்றுக்கொண்டார்.