உக்ரைனில் இருந்து இந்தியாவை சேர்ந்த அனைத்து மாணவர்களையும் மத்திய அரசு பத்திரமாக தனது செலவில் மீட்டு வந்தது. ஆனால், தாங்கள் சென்று மீட்கப்போவதாக கூறிய தமிழக அரசு, அதற்கான குழு அமைப்பது, மத்திய அரசிடம் அனுமதி கேட்பது என நாடகமாடியது. இதற்காக ரூ. 3.5 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு இப்பணிகளுக்காக ஒதுக்கிய பணம் எவ்வளவு, எப்படி செலவு செய்யப்பட்டது என்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொள்ளாச்சியை சேர்ந்த யுவராஜ் ராமலிங்கம் என்பவர் கேட்டிருந்தார். அதற்கு, டெல்லியில் தமிழக மாணவர்கள் தங்கியது, அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ஓட்டல் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இதற்காக ‘ராதிகா டிராவல்ஸ், பிளாக் ஈகிள் டிராவல்ஸ், என பல்வேறு நிறுவனங்களுக்கு தொகை செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் குறித்த விபரங்களை தேடியதில் செரன் தீப் சோர்சிங் நிறுவனம் ‘ஸ்வெட்டர்’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, அந்நிறுவன உரிமையாளர்களில் ஒருவர் டாக்டர் கோகுல் கிருபாசங்கர், அவர் தி.மு.க. மருத்துவ அணி மாநில துணை செயலாளர். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மருமகன் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வர ‘ஸ்வெட்டர்’ தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஏன் செலவிட வேண்டும்? இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யார் யாருக்கு எவ்வளவு எதற்காக கொடுக்கப்பட்டது என்ற விவரங்களையும் கொடுக்க மறுத்து விட்டனர். இந்த விஷயத்தை அப்படியே விடமாட்டேன். தொடர்ந்து தகவல்களை அரசிடம் கேட்டு பெற தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வேன்’ என்று யுவராஜ் கூறியுள்ளார்.