மீண்டும் தவறிழைக்கும் முகமது ஜுபைர்

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனரும், வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு பொய் செய்திகளை பரப்பியதற்காக சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்தவருமான முகமது ஜுபைர், மீண்டும்தேபோல வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையில் அரைகுறை செய்திகளை பரப்பி வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட நிஷாங்க் ரத்தோர் கொலை வழக்கு குறித்து கருத்துத் தெரிவித்த முகமது ஜுபைர், “ வலதுசாரி பிரச்சார இணையதளங்கள் மற்றும் பல வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்கள் நிஷாங்க் ரத்தோர் கொலை வழக்கை ஒரு வகுப்புவாத பிரச்சனையாக்க தங்களால் இயன்றவரை முயற்சிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உடன்படாத எவரும் கோழைகள்” என்று இவ்வழக்கில் அடிப்படை உண்மைகளை மறைத்து வழக்கம்போல அரைகுறை செய்தியை திட்டமிட்ட ரீதியில் பரப்பியுள்ளார். இதற்கு சமூக ஊடகங்களில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிஷாங்க் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அவரது தந்தைக்கு, “ரத்தோர் சார், உங்கள் மகன் தைரியசாலி. தீர்க்கதரிசி நபியை இழிவு செய்பவர்களின் தலை துண்டிக்கப்பட வேண்டும்” என மிரட்டல் செய்தி அவரது மகனின் தொலைபேசியிலிருந்தே அனுப்பப்பட்டது. மேலும், நிஷாங்கின் சமூக உடக பக்கங்களில் தலை துண்டிப்பு செய்தி பரப்பப்பட்டது. நிஷாங்க் ஒரு வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான 20 வயது பொறியியல் மாணவர். அவருக்கு தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு எந்த காரணமும் இல்லை. நிஷாங்க் கொலை செய்யப்பட்டார் என்று உறுதியாக நம்புகிறோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.