மோடி கபடி லீக் போட்டி

பா.ஜ.க சார்பில் நடைபெற உள்ள மோடி கபடி லீக் போட்டிக்கான கோப்பையை, சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை அறிமுகம் செய்துவைத்ததுடன் மோடி கபடி லீக் ஜோதி ஓட்டத்தையும் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “வெற்றி, தோல்வியை இளைஞர்கள் சமமாகக் கருதுவதற்கான மனநிலையை விளையாட்டுப் போட்டிகள் வளர்க்கின்றன. எனவே, அரசியல் கலப்பின்றி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் 17 முதல் 30ம்தேதி வரை இந்த போட்டு நடத்தப்படும். இதில் 5 ஆயிரம் அணிகளைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாட உள்ளனர். மாநில அளவிலான இறுதிப்போட்டி மதுரையில் வரும் 27 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 லட்சம், 2வது பரிசாக ரூ.10 லட்சம், 3, 4வது பரிசாக தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2வது பரிசாக ரூ. 50,000, 3, 4வது பரிசாக தலா ரூ. 25,000 வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை, இத்தாலி நாட்டில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கோப்பைகளை தயாரிக்கும் இடத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. அவர்களை நல்வழிப்படுத்த விளையாட்டுதான் தீர்வு. எனவே, தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளோம்” என்றார்.