புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமாவையொட்டி நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள லும்பினியில் அமைந்துள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினார். பல்வேறு மரங்களை நட்டார். லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான பாரத சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜையை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவுடன் இணைந்து பிரதமர் மோடி மேற்கொண்டார். அங்குள்ள மாயாதேவி கோயிலுக்கும் சென்று வழிப்பட்டார். மோடியுடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா உடன் சென்றார். முன்னதாக காத்மாண்டு விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.