தவறாக புரிந்துகொள்ளப்பட்ட உத்தரவு

ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ், “சுப்பிரமணியசாமி, உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடுத்துள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள, 40 ஆயிரம் கோயில்களையும் எந்த சட்டமுறையையும் பின்பற்றாமல் தமிழக அரசு சட்ட விரோதமாக தன் கட்டுப்பாட்டில் அரசு வைத்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் உள்ள, சில அரசியல் சாசன விரோத பிரிவுகளை வைத்து, தமிழக அரசு இதை செய்து வருகிறது. இந்தப் பிரிவுகள் அரசியல் சட்ட விரோதம் என்றும், அரசின் சட்ட திருத்தத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில், கோயில்களில் அர்ச்சகர் நியமனம் என்பதை, மதச்சார்பற்ற செயலாக கொள்ள முடியாது. அப்படி நியமனம் செய்வது, மதச்சார்பற்ற நிர்வாகப்பணி என்று கருதினாலும், ஒரு மதச்சார்பற்ற அரசு, அந்த நியமனங்களைச் செய்ய முடியாது. அறங்காவலர்கள் மட்டுமே நியமனம் செய்யலாம். கோயில் உள்துறை விஷயத்தில் அரசு குறுக்கிடுவது சட்ட விரோதம். ஆகம விரோதமாகவோ, கோயில் சம்பிரதாய விரோதமாகவோ, அர்ச்சகர் நியமனங்களை யாரும் செய்ய முடியாது” என்றும் கூறப்பட்டது.

சுப்பிரமணியசாமியின் வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, தமிழக அரசுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. ஆனால், அர்ச்சகர் நியமனத்திற்கு வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை அளிக்க மறுத்து விட்டது. ஆனால், இது புரியாமல், செய்தி, ஊடகங்கள், ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகத் தடை இல்லை’ என்று தவறாக தகவலை வெளியிட்டு விட்டனர். ஆகமத்திற்குப் புறம்பாக எவரையும் அர்ச்சகராக நியமனம் செய்ய முடியாது; கோயிலில் எந்த நியமனங்களையும் அரசு செய்ய முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே நான் தொடுத்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேலும், தவறான நபரை நியமித்தால் அதை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பின் படியும், 1972ல் கூறப்பட்ட சேஷம்மாள் வழக்குத் தீர்ப்பின் படியும், 2016ல் வெளியான ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கின் தீர்ப்பின் படியும், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு சட்டப்பூர்வ தடை உள்ளது. எனவே, தடை இல்லை என்ற தகவல் தவறானது” என்று கூறினார்.