தமிழகம் முழுதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில், சொத்து வரியை உயர்த்துவதற்காக, ஒவ்வொரு வீட்டுக்கும் படிவம் அளித்து கட்டட பரப்பு, பழைய சொத்து வரி விகிதம் குறித்த விபரங்கள் பெறப்பட்டன. இந்த விபரங்கள் அடிப்படையில், சமீபத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்த அறிவிக்கை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில், படிவத்தில் பெறப்பட்ட அடிப்படை தகவல்களுக்கு மாறாக புதிய தகவல்கள் உள்ளன. பெரும்பாலான இடங்களில், வீட்டின் பரப்பளவு விபரங்கள் தவறாக குறிப்பிடப்பட்டு குளறுபடிகள் நடந்துள்ளது. வீட்டின் பரப்பளவு அதிகமாக அதில் காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக சொத்து வரி வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.