அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் ஹீலிங் மையம் எனப்படும் ஒரு கிறிஸ்தவ மிஷனரி தலைவர் ரஞ்சன் சூட்டியா என்பவர் அசாமிய மக்களால் பெரிதும் மதிக்கப்படும் குரு ஸ்ரீமந்தா சங்கர் தேவின் மத மற்றும் கலாச்சார படைப்புகளை தனது மத மாற்றத்திற்காக தவறாக பயன்படுத்தினார். அசாமிய மக்களின் பக்திபாடல்களான நபர் போர்கீட், நாம், குஷா ஆகியவற்றை ஏசுவின் பெயரில் மாற்றி மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டார். இது குரு ஸ்ரீமந்தா சங்கர் தேவின் லட்சக்கணகான சீடர்களை வருத்தப்பட வைத்தது. பலரும் இது குறித்து புகார் அளித்தனர் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பாபுல் போரா குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் ரஞ்சன் சூட்டியா கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, மோரானில் உள்ள தனது உலக குணப்படுத்தும் பிரார்த்தனை மையத்தில், ஏசு கிறிஸ்து தனக்கு கொடுத்த சிறப்பு சக்தியைக் கொண்டு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதாக கூறினார் ரஞ்சன் சூட்டியா. ஆனால், கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது கூடுதல் தகவல்.