குழந்தைகளைப் பயன்படுத்தும் மிஷனரிகள்

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, எந்தவொரு பிரச்சார வீடியோவிலும் குழந்தைகளைப் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், கிறிஸ்தவ மத போதகர்கள், மிஷனரிகள், தங்களது மதபிரச்சார வீடியோக்களில் குழந்தைகளை அதிகமாக நடிக்கவைத்து அதனை பயன்படுத்தி மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். அவ்வகை வீடியோக்கள் தற்போது அதிகமாக வெளியாகின்றன. சமீபத்தில், சண்டிகரில் உள்ள பாஸ்டர் பால்ஜிந்தர் சிங் என்பவர், ஒரு சிறுவனின் மாற்றுத்திறனாளியான சகோதரியை குணப்படுத்தினார் என்ற செய்தியை பரப்பினார். அதற்கு ஆதரமாக, வாய் பேச முடியாத அந்த சிறுமியை தனது மந்திரத்தினால் அவர் பேசவைத்ததாக ஒரு வீடியோவை வெளியிட்டார். இதை குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.சி.பி.ஆர்) சண்டிகர் காவல்துறை துணை ஆணையருக்கு பாதிரி பால்ஜிந்தர் சிங்கின் வீடியோவை குறித்து விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.