ஏவுகணை சோதனைகள் வெற்றி

கப்பலில் இருந்து செலுத்தப்படும் ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணையின் இறுதிகட்ட சோதனையை பாரதம் வெற்றிகரமாக நடத்தியது. மேற்கு கடலோர பகுதியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, இலக்கினை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது. இதேபோல, ராணுவ ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய, கைகளில் தூக்கிச் செல்லத்தக்க, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின் இறுதி சோதனையை வெர்றிகரமாக நடத்தி பரிசோதித்தது. இந்த நவீன ஏவுகணையில், சிறிய ரக அகச்சிவப்பு கதிர் கருவி, நவீன ஏவியானிக்ஸ், வழிகாட்டுதல் கருவிகள் உள்ளன. இந்த வெற்றிக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான ராணுவ தளவாடங்களை உருவாக்கும் தற்சார்பு பாரதம் திட்டத்தில் இது முக்கிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.