கூகுள் மொழி பெயர்ப்பில், மலையாளத்தில் பெரிய எழுத்துக்களில் GOD (கடவுள்) என்ற சொல்மொழிபெயர்க்கப்படும்போது, அது ‘அல்லாஹு’ என்றுக் காட்டுகிறது.ஆனால், சிறிய எழுத்துகளில் god என்று மொழிபெயர்க்கப்படும்போது, அது, ‘தெய்வம்’ என்றுக் காட்டுகிறது. இதனால், இதை போன்று தவறாக, ஒரு மதம் சார்ந்த வகையில் மொழி பெயர்க்கும் கூகுள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற மொழிபெயர்ப்புகளை அறிந்து உடனடியாக மாற்றவும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக, கூகுள் மொழிபெயர்ப்பில் ஹிந்தியில் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று மொழிபெயர்த்தபோது அது, ‘அஸ்ஸலாமு அலைக்கம்’ என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உண்மையில், ‘அசலாமு அலைக்கம்’ என்ற அரபு வார்த்தைக்கு “உங்களுக்கு அமைதி கிடைக்கும்” என்பதே பொருள்.முஸ்லீம் அறிஞர்களின் கூற்றுப்படி, இது ஹதீஸின்படி செய்யப்படுகிறது.ஆர்கனைசர் வாராந்திர பத்திரிகை இந்த தவறை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, கூகுள் அந்த மொழிபெயர்ப்பை ‘பகவன் ஆப்கா பலா கரே’ என்று ஹிந்தியில் மாற்றியது.இதைப் போன்ற தவறான மொழி பெயர்ப்பு குறித்து மக்கள் கூகுளுக்கு உடனடியாக ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.மேலும், ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் நமது பாரதத்திற்கென ஒரு பிரத்யேக தேடுபொறியை உருவாக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.