சட்டத்தை மீறிய அமைச்சர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி, கருமண்டபத்தில் தி.மு.க.வின் சார்பில், 1,500 பேருக்கு உனவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். நலத்திட்ட உதவிகளைப் பெற, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 200 தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை அதன் அமைச்சர் ஒருவரே மீறியுள்ளார். இக்கூட்டத்தில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை, தி.மு.கவினர் உட்பட பலர் முகக்கவசம் அணியவில்லை. இது குறித்து, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.