குற்றவாளிக்கு உதவும் அமைச்சர்

லட்சத்தீவு தீவுகளின் மக்களுக்கு எதிராக மோடி அரசாங்கம் கொரோனாவை உயிரி ஆயுதமாக பயன்படுத்தியதாகக் கூறிய சர்ச்சைக்குரிய கேரள நடிகையும் மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது பா.ஜ.கவின் லட்சத்தீப் பிரிவு தலைவர் சி அப்துல் காதர் ஹாஜியின் புகாரின் பேரில் லட்சத்தீவு காவல்துறையால், ஐ.பி.சி பிரிவுகள் 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்புப் பேச்சு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் எனும் சூழலில், கேரள அமைச்சர் சிவன்குட்டி அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஆயிஷா கவலைப்பட வேண்டாம், பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு ஆயிஷாவுக்கு துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், “லட்சத்தீவில் நடைபெறும் சீர்திருத்தங்களுக்கு எதிராக நாங்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த செயல் கேரள அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.