கேரள காங்கிரஸ் பிரமுகரின் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சக காங்கிரஸ் தலைவர் பத்மாகரனை, அவ்வழக்கில் இருந்து விடுவிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன். இது கேரளா முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுசீந்திரன் சமீபத்தில் அந்த பெண்ணின் தந்தையிடம் அந்த வழக்கை சுமூகமாக பேசி தீர்க்க வற்புறுத்தியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசீந்திரனை பதிவியில் இருந்து நீக்க பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், ஆளும் கம்யூனிச கட்சி அவருக்கு சாதகமாகவே செயல்படுகிறது. முன்னதாக கடந்த 2017ல் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் சுசீந்திரன் பேசியது பெரிய சர்ச்சையாகியது. இதனையடுத்து அவர் பதவி விலகினார். ஆனால், அவரை கட்சி மீண்டும் இணைத்துக் கொண்டது என்பது நினைவு கூரத்தக்கது.