சர்ச்சையில் வனத்துறை அமைச்சர்

கேரளாவில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் மகள் அப்பகுதி காங்கிரஸ் யுவ மோர்ச்சாவில் பொறுப்பு வகித்தார். மேலும், அந்த பெண் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். கடந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகவும் போட்டியிட்டார். அவரிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி. பத்மாகரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், பா.ஜ.க உங்களுக்கு பணம் கொடுத்ததா, அதை நானும் தருகிறேன் என பேசியுள்ளார். இதனால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கில் இருந்து அவரை பாதுகாக்கும் நோக்கில் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் செயல்படுகிறார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை கண்டித்துள்ள கேரள பா.ஜ.க, அமைச்சர் சசீந்திரன் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.