உத்தர பிரதேசத்தில் அமையவுள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையத்திற்கான வேலைகள் வேகமெடுத்து உள்ளன. இதற்காக முதற்கட்டமாக, அலிகரில் 55.4 ஹெக்டேர் நிலம் 19 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு குத்தகைக்கு தரப்பட்டுள்ளன. அவை, அங்கு சுமார், 1,245 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளன. ஆலன் & எல்வோன் பிரைவேட் லிமிடெட் என்ற டிரோன் தயாரிப்பு நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கான குத்தகை பத்திரம் முதலில் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ராணுவ தளவாட உற்பத்தி காரிடாரை தமிழகத்தில்தான் மத்திய அரசு அமைத்தது. இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், சேலம், திருச்சி போன்ற நகரங்கள் பயனடையும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், பொருளாதாரம் பெருகும். ஆனால், இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட உத்தர பிரதேசம் இதில் வேகமாக செயல்பட்டு முதலீட்டை ஈர்த்து வருகிறது. தமிழக அரசும் இதில் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை.