பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், “விரைவில் ஆந்த பள்ளியை திறந்து வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது அவசியம். இதுபோன்ற சம்பவங்களை பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனங்களில் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடாது. மாணவர்களை படிக்கும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புறச் சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறினார்.