மெஹுல் சோக்ஸி காணவில்லை

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் காணாமல் போனதாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியுள்ளார்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல அரசியல்வாதிகள் துணையுடன் மெஹுல் சோக்ஸி தன் மருமகன் நீரவ் மோடியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கோடிக்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.இந்த மோசடி 2018ல் வெளிச்சத்துக்கு வந்தது.இதனால் அவர் தனது மருமகனுடன் சேர்ந்து நாட்டை விட்டு தப்பியோடினார்.சோக்ஸி ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தார்.அவரை பாரதத்திற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன்,’சோக்ஸியின் குடியுரிமை தொடர்பான அனைத்து சட்டரீதியான பிரச்சனைகள் தீர்ந்தவுடன் அவரது குடியுரிமையை ரத்து செய்து பாரதத்திடம் ஒப்படைக்கப்படுவார்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், தீவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்கு சென்ற சோக்ஸி வீடு திரும்பவில்லை.அவரது கார் ஜாலி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.கியூபாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை பாரதம் மேற்கொள்ளவில்லை என்பதால் அவர் கியூபாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.