தலாய் லாமா மோகன் பாகவத் சந்திப்பு

காங்க்ரா மற்றும் தர்மசாலாவிற்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள ராஷ்ட்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் ​​(ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, திபெத்திய அரசாங்கத்தின் தலைவரான பென்பா செரிங் மற்றும் அவரது அமைச்சரவை மற்றும் நாடுகடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சோனம் டெம்பெல் ஆகியோரும் மோகன் பாகவத்தை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய பென்பா செரிங், “இம்மாதம் 15ஆம் தேதி முதல் தலாய்லாமா பொதுமக்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார். அந்த வாய்ப்பு எனக்கு முதலில் கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ் மோகன் பாகவத்தும் தலாய்லாமாவும் சந்திப்பது மிகவும் இயல்பானது. பாரத்தின் அரசுகளும் பாரத மக்களும் எங்களுக்கு வழங்கிய ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க இது ஒரு வாய்ப்பு, இருவரும் மிகச் சிறந்த தலைவர்கள்’ என தெரிவித்தார். மேலும், காங்ராவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர், அங்கு நாடுகடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான கென்போ சோனம் டென்பெல் உட்பட சுமார் 60 அறிவுஜீவிகளை சந்தித்து உரையாடினார்.