தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரியும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபட ‘ஜென்டென்’ என்ற தியான பயிற்சி வகுப்புக்கு, கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக, ஒரே நேரத்தில் 15 காவலர்கள் அமர்ந்து தியானம் செய்ய, தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரம்மாகுமாரிகள், ஈஷா யோகா மைய நிர்வாகிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.