கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர், இணைய வழியில் மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கான பிரத்தியேக இணையதளத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். அப்போது அவர், ‘பாரதத்தில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் ராணுவத்தினர் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் ராணுவத்தினர் ஆற்றி வரும் சேவை மகத்தானது.கொரோனா தொற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.அவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் ஆன்லைனிலேயே மருத்துவ ஆலோசனைகளை பெற, இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும்.’ என தெரிவித்தார்.மேலும், 10 ஆயிரம் பாக்கெட்டுகள் ‘2டிஜி’ கொரோனா தடுப்பு மருந்து விற்பனையையும் இணையத்தில் துவக்கி வைத்தார்.