ஊடக கயமைத்தனம்

உத்தரபிரதேசம்: அம்ரோஹாவில் அப்சல் மாலிக் என்ற முஸ்லிம் மந்திரவாதியும் மற்றும் அவரது உதவியாளர்கள் தாரிக், சுல்பிகர் ஆகியோரும் இணைந்து ஒரு சிறுமியின் நோயை போக்குவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கக் கூடாது என்றும் அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட டைம்ஸ் நவ் செய்தி ஊடகம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ‘தாந்திரீகர்கள்’ என ஏதோ ஹிந்து சாமியார்கள் போல சித்தரித்து தங்களின் நடுநிலைத்தன்மையை பறைசாற்றிக்கொண்டது. டைம்ஸ் நவ் இப்படி செய்தி வெளியிடுவது முதல்முறை அல்ல. கடந்த 2018ல்கூட ஆசிப் நூரி என்ற குற்றவாளி குறித்து செய்தியில், ஒரு ஹிந்து சாதுவின் ஓவியத்தை வெளியிட்டது. இது போன்ற ஊடகங்கள் பொதுவாக, கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பாதிரிகள், மத பிரச்சாரகர்கள், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட செய்திகளை வெளியிடாது அல்லது அவர்களை ஹிந்துக்கள் போல காட்டி செய்தியின் தன்மையை திசை திருப்பிவிடும் பணியையே பல காலமாக செய்து வருகின்றன.