2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் குஜராத்தில் சுமார் 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டு இருக்கலாம், உறுப்புகளுக்காக கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்தி ஒன்று வெளியானது. இதனை குஜராத் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் குஜராத்தில் காணாமல் போன 41,621 பெண்களில் 39,497 (தோராயமாக 95 சதவீதம்) பெண்கள் குஜராத் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், “குடும்பத் தகராறு, ஓடிப்போதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் இந்த பெண்கள் காணாமல் போவது விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணையில் பாலியல் சுரண்டல், உடல் உறுப்புக் கடத்தல் போன்றவை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை” என்று குஜராத் காவல்துறையின் டுவிட்டர் பதிவில் விளக்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ் 24, சியாசட் உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்கள், பிரச்சார ஊடகங்கள், சமூக ஊடகங்களில் குஜராத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தவறான செய்திகள் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டன. ஆனால், அதில் மீட்கப்பட்டோர் குறித்த தகவல்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டன. குஜராத்தை இழிவுபடுத்தவும், பா.ஜ.க அரசைத் தாக்கவும் பல முஸ்லிம்கள் இந்த அறிக்கையைப் பகிர்ந்து கொண்டனர். முஸ்லிம்களின் மிக மோசமான ‘லவ் ஜிஹாத்’ வலையில் சிக்கி, மூளைச் சலவை செய்யப்பட்டு, பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாகவும், பயங்கரவாதிகளாகவும், தற்கொலைப் படையாகவும் மாற்றப்படும் பெண்களின் சோகமான யதார்த்தத்தை மையமாகக் கொண்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து திட்டமிட்ட வகையில் குஜராத் அரசு மீதான இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.