ஹரியானாவில் உள்ள நூஹ் நகரில் லவ் ஜிஹாத் தொடர்பான புதிய வழக்கு ஒன்று வெளிவந்துள்ளது, அங்கு வசிக்கும் ஒரு ஹிந்து பெண், மௌசம் கான் என்ற முஸ்லிம் இளைஞரை ஏமாற்றுதல், கடத்தல், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கட்டாய மதமாற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டி காவல்துறையை அணுகியுள்ளார். அவரது புகாரில், ஹரியானாவில் உள்ள ரேவாரி மாவட்டத்தில் உள்ள தருஹேரா பகுதியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் அவரை 2020ல் மௌசம் கான் தனது அடையாளத்தை மறைத்து பிரேம் என்ற ஹிந்து நபராக காட்டிக்கொண்டு நட்பு கொண்டார். விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து, அவரது போலி காதல் வலையில் விழ வைத்தார். பிறகு, பாலியல் அத்துமீறல் செய்தார். பின்னர், மௌசம் கான், மௌசம் கானின் தந்தை தாஹிர் கான், மாமாக்கள் தசவ்வார், அக்பர் மற்றும் சுலைமான் மற்றும் தாஹிர் கானின் நண்பர் பாபுலால் ஆகியோர் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மதம் மாறி திருமணம் செய்ய வற்புறுத்தினார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, மௌசம் கானின் சகோதரர் சலீம் அந்த பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். உறவினர்களால் மோசமாகத் தாக்கப்பட்டார். ஏப்ரல் 19, 2023 அன்று அந்த பெண் அங்கிருந்து தப்பித்து ரேவாரியில் உள்ள தனது பெற்றோரிடம் திரும்பும் வரை இந்த சித்திரவதை மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்தது. அவர் தன் தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கூறியதையடுத்து மௌசம் கான் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.