குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த மௌலவி

ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள தாருல் உலூம் சம்சியா என்ற மதரசாவில், 6 மைனர் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மௌலவி சம்ருதீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் குடும்பத்தினர் ஜார்கண்ட் காவல்துறையில் மதகுரு மீது புகார் அளித்ததையடுத்து இந்த கொடூர குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் மதகுரு சம்ருதீன், இந்த மதரசாவில் பல ஆண்டுகளாகப் பாடம் நடத்தி வந்தார். இவரிடம் இருந்து இஸ்லாமிய மத பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக 50 மாணவர்கள் மதரசாவில் பயில்கின்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், தனது குற்றம் அம்பலமானதால் தலைமறைவாகி விட்டார். கடந்த பிப்ரவரி 19 அன்று, அவர் மூன்று குழந்தைகளை தனது அறைக்கு அழைத்து, அவர்களில் இருவரை அறைக்கு வெளியே காவலுக்கு நிற்கும்படி அறிவுறுத்தினார். பிறகு, தனது அறையை உள்ளே இருந்து பூட்டிவிட்டு, மூன்றாவது குழந்தையை தனக்கு மசாஜ் செய்யும்படி கூறினார். குழந்தை அவ்வாறு செய்யும்போது, சம்ருதீன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். அந்த குழந்தை இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியது. இதையடுத்து குழந்தையின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், அதே மதரசாவின் மற்றொரு ஆசிரியரான அஷ்ரப் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாகவும், ஆனால் யாரோ ஒருவர் இந்த விஷயம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் அவரது முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து அதன் அடிப்படையில் மதகுரு மீது வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை அறிக்கைகளின்படி, மதரசாவின் ஆறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மதகுரு சம்ருதீனால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.