ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரமாண்டமாக ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரதத்தில் முஸ்லிம்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இடித்துத் தள்ளப்பட்டு அங்கு மசூதி கட்டப்படும் என தனது மதவெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார் அகில இந்திய இமாம் சங்க தலைவர் மௌலானா சஜித் ரஷிதி. டைம்ஸ் நவ் நவ்பாரத் தொலைக்காட்சியில் பேசிய அவர், “இன்று முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் என் பிள்ளைகள், என் மகன், அவனுடைய மகன், அவனுடைய பேரன்….? 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வரலாற்றில் எங்கள் மசூதி அழிக்கப்பட்டு அது கோயிலாக மாறியது என்று படிப்பார்கள். ஒரு முஸ்லீம் நீதிபதி அல்லது ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் அல்லது ஒரு முஸ்லிம் அரசு அந்த நேரத்தில் ஆட்சிக்கு வரலாம். மாற்றங்கள் வருமா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது… ஆனால், வரலாற்றின் அடிப்படையில், தற்போதுள்ள இந்த ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படாதா? என்றால், ஆம் அது கண்டிப்பாக நடைபெறும். பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அங்கு ஹிந்துக் கோயில் கட்டப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, நாட்டின் பிரதமர் அந்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் என்று வரலாறு எழுதப்படும்” என தெரிவித்துள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஜித் ரஷிதி இவ்வாறு விஷத்தைக் கக்குவது இது முதல் முறையல்ல. கடந்த நவம்பரில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மதரசாக்கள் நவீனமயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, “எங்களுக்கு யாரிடமிருந்தும் எதுவும் தேவையில்லை. அரசால் நடத்தப்படும் மதரசாக்களில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் தனியார் மதரசாக்களை தொட வேண்டாம். தனியார் மதரசாக்களை அரசாங்கம் தொடத் துணிந்தால் பாரதம் தீப்பற்றி எரியும்” என எச்சரித்தார். மேலும், அங்கீகரிக்கப்படாத மதரசாக்களை கணக்கெடுப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு முயற்சித்தபோது அதற்கும் முட்டுக்கட்டை போட முயன்றார். செப்டம்பர் 14 அன்று, மாநில சர்வே அதிகாரிகளை செருப்புகள் மற்றும் காலணிகளுடன் வரவேற்க மதரசா அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.