உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், முகமது சஜ்ஜாத் என்ற நபர், 4 பெண்களை சவரக் கத்தியால் தாக்கிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜாத் கடந்த இருபது நாட்களாக கிலா மற்றும் பிரேம் நகர் காவல் நிலையப் பகுதிகளில் உள்ள ஒதுக்குப்புறமான தெருக்களில் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் சுற்றித் திரிந்து இளம் பெண்களைத் தாக்கி பலத்த காயம் அடைய வைத்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய சவரக் கத்தி, பிளேடு மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். நான்கு இளம் பெண்களை தாக்கிய குற்றவாளிகளின் நோக்கம் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, தச்சுத் தொழிலாளியான சஜ்ஜாத்துக்கு முதல் மனைவி சபீனா மற்றும் இரண்டாவது மனைவி ரவீனா மூலம் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இருந்தபோதும் 25 வயதுடைய ஃபிசா என்ற பெண்ணை 3வதாக திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஃபிசா, சஜ்ஜாத் மீது வழக்குப் பதிவு செய்தார். ஃபிசாவால் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுபடுவதற்காக, உள்ளூர் மசூதியில் உள்ள ஒரு மௌலானாவின் வழிகாட்டுதலை சஜ்ஜாத் கோரினார். அங்கிருந்த ஒரு மதகுரு (மௌலானா) ஜும்மாவின் பகல் மற்றும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தீங்கு செய்ய தூண்டினார் என முகமது சஜ்ஜாத் கூறினார். அதுவும். ஒரு முறை அல்ல, குறைந்தது ஏழு முதல் ஒன்பது முறை அவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை அவர்களை இலக்குவைத்து தாக்க வேண்டும் என அந்த மௌலானா சஜ்ஜாத்துக்கு அறிவுறுத்தினார். அப்போதுதான் இந்த ‘மாயவித்தை’யின் விளைவு வேலை செய்யும் என்று மூட நப்பிக்கையை தூண்டியுள்ளார்.