மன்னிப்பு கேட்ட மாத்ருபூமி

கம்யூனிஸ்ட் பயங்கரவாத தலைவர் சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. ஆனால், மகாராஷ்டிர அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்ப்புக்கு தடை கோரியது. இதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தியை வெளியிட்ட புகழ்பெற்ற மலையாள பத்திரிகை மற்றும் ஊடகமான மாத்ருபூமி, அதில் கம்யூனிஸ்ட் பயங்கரவாத தலைவர் சாய்பாபாவுக்கு பதிலாக, ஹிந்துக்கள் வணங்கும் ஆன்மீக குரு ஷீரடி சாய்பாபாவின் படத்தை வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. ஹிந்துக்கள், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாத்ருபூமி சேனல் தனது தவறுக்கு மன்னிப்பு கோரியது. ஹிந்துக்களுக்கும், ஹிந்து அமைப்புகளுக்கும், பா.ஜ.கவுக்கும் எதிரான நிலைப்பாடுகளுக்குப் பெயர்போன ஊடகங்களில் ஒன்று மாத்ருபூமி என்பது குறிப்பிடத்தக்கது.