பாடபுத்தகத்தில் மருதுபாண்டியர்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நினைவிடத்தில் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவத்து மரியாதை செலுத்திய பின்னர் பேசிய மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ  ஹரி ஹர தேசிய சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், “மத்திய, மாநில அரசுகள் மன்னர் மருது பாண்டியர்களின் வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும். வெள்ளையனுக்கு எதிராக நாட்டின் சுதந்திரத்திற்காக அவர்கள் போர் புரிந்தனர். ஆனால், தற்போதைய மாணவர்களுக்கு அவர்களின் வரலாறு தெரியவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களின் படம் பொறித்த தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்,.மதுரை ஆதின மடத்திற்காக வெள்ளி தேரினை மருதுபாண்டியர்கள் செய்து கொடுத்தனர். ஆண்டுதோறும் மடத்தில் இருந்து திருக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் புறப்பாடு இருக்கும். காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரருக்காக இன்னுயிர் தந்தவர்கள் மருதுபாண்டியர்” என தெரிவித்தார்.