ஆங்கிலேயர் ஆட்சியில் மத்தியச் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசி விடுதலை வேட்கையை எடுத்துரைத்த புரட்சியாளர்கள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் 1931 மார்ச் 23 அன்று லாகூர்ச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், ‘பாரதத் தாயின் பிள்ளைகளான பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு அஞ்சலி. தாய் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அவர்களின் தியாகம் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரும் தியாகிகளை நினைவு கூர்ந்துள்ளனர்.