நாடு தழுவிய சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு செய்தது. அந்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்தது. அப்போது, பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுக்க வந்திருந்த என்.ஐ.ஏ அதிகாரிகளை அங்கு வந்திருந்த தடை செய்யப்பட்ட அந்த அமைப்பை சேர்ந்த சிலர், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் புகைப்படங்கள் எடுத்தனர். இந்த புகைப்படங்கள் மர்மமான சூழ்நிலையில் எடுக்கப்பட்டவை என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு சமர்பித்தனர். இதனையடுத்து பி.எப்.,ஐ அமைப்பினரை நீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்தது. இது ஒரு கடுமையான குற்றம், மீண்டும் செய்யக்கூடாது என கூறியது.