உக்ரைனிலிருந்து நமது குடிமக்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் கங்காவில்’ தொடர்புடையவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியாக சந்தித்து ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனிலிருந்து சுமார் 23,000 இந்தியக் குடிமக்களும், 18 நாடுகளைச் சேர்ந்த 147 வெளிநாட்டவர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இந்த கலந்துரையாடலின்போது பாரத சமூகம், மற்றும் உக்ரைன், போலந்து, ஸ்லொவேகியா, ருமேனியா, ஹங்கேரி ஆகியவற்றின் தனியார் துறை பிரதிநிதிகளும் ஆபரேஷன் கங்காவின் பகுதியாக தங்களின் அனுபவங்களை, தாங்கள் எதிர்கொண்ட சவால்களை விவரித்தனர். மேலும் சிக்கலான இந்த மீட்பு இயக்கத்தில் பங்கெடுத்ததால் தாங்கள் பெற்ற கௌரவத்தையும் தங்களின் திருப்தி உணர்வையும் வெளிப்படுத்தினர். இந்த இயக்கம் வெற்றி பெறுவதற்கு அயராது பாடுபட்ட பாரத சமூகத் தலைவர்கள், தொண்டர்கள், நிறுவனங்கள், தனியார் துறையைச் சேர்ந்த தனிநபர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு கனிவான பாராட்டுக்களைப் பிரதமர் தெரிவித்தார். மேலும், இந்த நெருக்கடியான தருணத்தில் நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்த பிரதமர், அனைத்து வெளிநாட்டு அரசுகளிடமிருந்தும் பெறப்பட்ட ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.