மமதாவின் ஜிஹாத் பிரகடனம்

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய மமதா, “திரிணமூல் காங்கிரஸ் ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மாவீரர் தினம் – தியாகிகள் தினம் ஜூலை 21ல் நடைபெறும். இந்த கூட்டங்களில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். நம்முடைய தியாகிகள் தினத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான ஜிஹாத்தை நாம் பிரகடனப்படுத்துவோம்; மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவை வீழ்த்த உறுதியேற்போம்” என கூறியிருந்தார். இதனை வன்மையாக கண்டித்துள்ள பா.ஜ.கவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா, “மாற்று கருத்துகள் கொண்டோருக்கு எதிரான தாக்குதலுக்கான முழக்கம் இது. அதாவது மேற்கு வங்க மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட போகிறாரார் மமதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதைகூட உணராமல் ஏதோ ஒரு பயங்கரவாத கூட்டத்தின் தலைவர் போல மமதா பேசுகிறார், தனது கருத்துக்கு மாற்று கருத்தை யாருமே கூறக்கூடாது என கருதுகிறாரா? ஒரு முதல்வர் என்பவர் இப்படி சகிப்புத்தன்மையற்றவராக இருக்கலாமா? என சமூக ஊடகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.